ஆந்திராவில் பிறந்த ஆண், பெண் குழந்தைக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என பெயர் சூட்டிய பெற்றோர்கள்!!!

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனியார் மருத்துவமனையில் பிறந்த ஆண்குழந்தைக்கு கொரோனா குமார் என்றும், பெண் குழந்தைக்கு கொரோனா குமாரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரசும், அதனால் ஏற்படும் கோவிட்-19 நோயும் உயிர்களை பலி கொண்டு உலகையே அச்சுறுத்தி வருகின்றன.கொரோனா வைரஸ், தேசிய ஊரடங்கு உத்தரவு இரண்டும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். மறக்க முடியாத இந்த நிகழ்வையே பிறந்த குழந்தைகளுக்கு பெயராக வைக்கும் சுவாரஸ்யமும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் வேம்பள்ளி மண்டலத்தில் இருக்கும் தாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சசிகலா, அபிரெட்டி கிராமத்தை சேர்ந்த ரமா தேவி ஆகியோர் பிரசவத்திற்காக வேம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சசிகலாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா குமார் என்றும், ரமாதேவிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா குமாரி என்றும் பெற்றோர்கள் பெயர் சூட்டினர்.

இதே போல், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இளம் தம்பதி, தங்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்டுள்ளனர். உத்திரபிரதேசத்தில் தியோரியா மாவட்டத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு லாக்டவுன் என்று அவர்களது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.இதேப் போன்று கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: