திருவண்ணாமலை அடுத்த தேனிமலையில் திடீர் தீயால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அடுத்த தேனிமலையில் ஏற்பட்ட திடீர் தீயில் ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலானது திருவண்ணாமலை- தண்டராம்பட்டு சாலையில் உள்ளது தேனிமலை. இந்த மலையில் நேற்று மாலை 6 மணி அளவில் லேசாக தீப்பற்றியது. பின்னர், காற்று பலமாக வீசியதால் கிடுகிடுவென மலை முழுவதும் தீ பரவியது.இதனால், தேனி மலையில் இருந்த ஏராளமான மரம், செடி கொடிகள் கொழுந்துவிட்டு எரிந்தது. பல அடி உயரத்திற்கு கரும்புகை எழும்பியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மலையின் பெரும்பகுதியை தீ ஆக்கிரமித்தது.

Advertising
Advertising

இதனால் மலையிலிருந்த ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலானது. தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனாலும் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க முடியவில்லை. இரவு 8 மணி வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.கோடைகாலம் என்பதால் மலையில் இருந்த மரங்கள் பெரும்பாலும் காய்ந்திருந்தன. இதனால் பெரும்பாலான மரங்கள் தீக்கு இறையானது. தேனிமலைப் பகுதிக்கு செல்லும் விஷமிகள் யாராவது தீயை பற்ற வைத்து இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: