டாஸ்மாக் கடைகளில் திருட்டை தடுக்க நுகர்வோர் வாணிப கிடங்குக்கு ரூ.3 கோடி மதுபானம் மாற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகளும், கிராமப் புறங்களில் 19 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அரசு உத்தரவுப்படி அடைக்கப்பட்டுள்ளன. இதில் நகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பான இடங்களில் உள்ளன. அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. அதனால் நகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் இருப்பு அப்படியே உள்ளது. ஆனால், காக்களூர், கும்மிடிப்பூண்டி உட்பட சில டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கொள்ளை போனது.

இதனால் பாதுகாப்பு கருதி திருவள்ளூர் தாலுகாவில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ₹3 கோடி மதிப்பு மதுபாட்டில்கள் லாரிகள் மூலம் திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டன. அதனை அந்தந்த டாஸ்மாக் கடை பொறுப்பாளர்கள் கொண்டுவந்தனர். இது டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடந்ததாக தெரிகிறது.

Related Stories: