ஆறரை ஆண்டில் இல்லாத அளவாக தங்கம் இறக்குமதி 73 சதவீதம் குறைந்தது

மும்பை: தங்கம் இறக்குமதி கடந்த மார்ச் மாதத்தில், ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவாக, 73 சதவீதம் குறைந்துள்ளது,  தங்கம் இறக்குமதியில் உலகில் 2வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. ஆபரண தேவைக்காகவே பெரும்பான்மை அளவுக்கு தங்கம் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி அபரிமிதமாக குறைந்துள்ளது.  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் 93.24 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த மாதம் சுமார் 25 டன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Advertising
Advertising

இது முந்தைய ஆண்டை விட சுமார் 73 சதவீதம் குறைவாகும் என மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.  சர்வதேச சந்தையில் தங்கம் விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. அதோடு பொருளாதார பின்னடைவால் தங்கள் விற்பனை சரிந்தது. இதன்காரணமாக தேவை குறைந்ததால் தங்கம் இறக்குமதி கடும் சரிவை அடைந்துள்ளது என நகை விற்பனை துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: