10 நாட்களில் 7,876 பேருக்கு ஜிஎஸ்டி ரீபண்ட்

புதுடெல்லி: ஜிஎஸ்டி ரீபண்ட் கோரி தாக்கல் செய்தவர்களில், 7,876 பேருக்கு ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜிஎஸ்டி கோரிக்கைகளை பரிசீலனை செய்ய நாடு முழுவதும் சுமார் 1,750 வருமான வரி அதிகாரிகளுக்கு வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான அனுமதியை ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்மூலம், ஊரடங்கு தொடங்கி முதல் 10 நாட்களில், ஜிஎஸ்டி பதிவு தொடர்பான 20,273 கோரிக்கைகள் பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டுள்ளன.

Advertising
Advertising

இவற்றில் 10,000 விண்ணப்பங்கள் புதிதாக ஜிஎஸ்டி பதிவு செய்வது தொடர்பானவை. இதுபோல், மேற்கண்ட 10 நாட்களில் 7,876 ரீபண்ட் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டிஎன் நெட்வொர்க் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: