செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் சிவசங்கரன் (40). படாளம் ரயில்வே கேட் கீப்பர். அதே ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் பிரதீப்குமார் (30). ஒத்திவாக்கம் ரயில்வேகேட்டில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஆராயி என்பவரது மகன் சிவராமன் (30. கார் டிரைவர். மூவரும் குடிப்பழக்கம் உடையவர்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. எனவே கள்ளசந்தையில் ₹100 மதிப்புள்ள குவாட்டரை ₹200 மற்றும் ₹300 கொடுத்து வாங்கி குடித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக குவாட்டர் ₹450க்கு விற்பனை செய்தனர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த குவாட்டரும் கிடைக்கவில்லை. இதனால் திருக்கழுக்குன்றம் பகுதியில் எரிசாராயம் வாங்கி வந்து செங்கல்பட்டு அடுத்த படாளம் பகுதியில் நேற்று 3 பேரும் குடித்துள்ளனர்.