பிஎப் நிறுவனம் அறிவிப்பு பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும்

புதுடெல்லி: பி.எப் உறுப்பினர்களின் பிறந்த தேதி பிஎப் ஆவணங்களில் தவறாக இருந்தால், அதை சரிசெய்ய, திருத்தப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளை கள அலுவலகங்களுக்கு பிஎப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பிஎப் ஆவணத்தில் பிறந்த தேதியை மாற்றம் செய்வதற்கு செல்லத் தகுந்த ஆவணமாக ஆதார் ஏற்றுக் கொள்ளப்படும். ஆதார் மற்றும் பிஎப் ஆவணங்களில் உள்ள பிறந்த தேதிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 3 ஆண்டுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த திருத்தம் செய்ய பிஎப் சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertising
Advertising

இதை உடனே பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என கள அலுவலகங்களுக்கு பிஎப் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.  கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், பிஎப் நிதியில் இருந்து 75 சதவீத தொகையை சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், பிஎப் சந்தாதாரர்கள் விண்ணப்பிக்க வசதியாக புதிய வழிகாட்டி குறிப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: