செங்கல்பட்டு: செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் எதிரில், பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உழவர் சந்தை மற்றும் தூய கொலம்பா பள்ளி ஆகிய பகுதகிளில் சமூக இடைவெளியில் காய்கறி கடைகள் அமைக்க கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார்.ஆனால், பள்ளி வளாகத்தில் மட்டும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், அருகில் உள்ள வேணுகோபால் கிளப்பில் காய்கறி கடை இயக்கப்படுகிறது. அங்கு கொரோனா பற்றி அச்சமில்லாமல் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு காய்கறி வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக, வியாபாரிகளும், பொதுமக்களும், முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி விடாமல் உள்ளனர்.