ஊரடங்கு உத்தரவால் ஈரோடு விசைத்தறியாளர்கள் பாதிப்பு: நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி உற்பத்தி பாதிப்பதாக வேதனை

ஈரோடு: ஊரடங்கு உத்தரவு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 30,000 விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வங்கி கடன், மின்கட்டணம் வசூலிப்பதில் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவுளி உற்பத்திக்கு புகழ் பெற்ற ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் அளவிற்கு உறபத்தியானது இங்கு நடைபெற்று வருவது வழக்கம். 2 கோடி மீட்டர் அளவுக்கு ரேயான் துணிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும், 30,000 தொழிலாளர்கள் இந்த தொழில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கின் காரணமாக விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 சதவீதத்திற்கும் அதிகமான தினக்கூலி தொழிலாளர்கள் இந்த தொழிலில் அதிமகா ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று சிறு, குறு, உற்பத்தியாளர்கள் இந்த விசைத்தறி தொழிலையும் நம்பி இருந்து வருகின்றனர்.

இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் மின்கட்டணத்தில் சலுகை, வங்கிக்கடனில் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்தால் மட்டுமே தொடர்ந்து இந்த ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு தங்களது  தொழிலை மீண்டும் நடத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: