அதாவது, கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,705க்கும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,640க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.440 எகிறியது appeared first on Dinakaran.