உலகை உலுக்கும் கொரோனா; உயிர் பிழைக்க போராடும் மக்கள்.. இத்தாலியில்13,155 , ஸ்பெயினில் 10,003, அமெரிக்காவில் 5,112 என 48,259 உயிர்களை குடித்த உயிக்கொல்லி!!

ரோம் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48000ஐ தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 9,49,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,48,259 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,01,556 பேர் குணமடைந்துள்ள நிலையில் 35,825 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். உலக அளவில் பார்த்தால் இத்தாலி , ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தது.

*உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் 13,155 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவால் 1,10,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*அமெரிக்காவில் இதுவரை 5,112 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 215,344 ஆக உயர்ந்துள்ளது.

* சீனாவில் கொரோனா தொற்றுக்கு 3,318 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 81,589 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*ஸ்பெயினிலும் பலியானோர் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது. அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 110,238 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,003 ஆகவும் உள்ளது.ஸ்பெயினில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 616 பேர் உயிரிழந்தனர்.

*இதே போல் கொரோனா தொற்றுக்கு பிரான்சில் 4,032 பேரும்,ஈரானில் 3,160 பேரும்,ஐரோப்பியாவில் 2,352 பேரும் உயிரிழந்துள்ளனர்.

*இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 400க்கும் மேல் சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 50 பேர் பலியான நிலையில், 150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: