நெல்லையப்பர் கோயில் மிருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி

நெல்லை: கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில்களில் நவக்கிரக ராகு - கேது, சனி பகவான் சன்னதிகளில் அஷ்டோத்ரசத நாமாவளி சிறப்பு வழிபாடு நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதன்படி நெல்லையப்பர் கோயிலில் நேற்று காலையில் நவக்கிர சன்னதியில் ராகு - கேது சனி பகவான் சன்னதிகளில் அஷ்டோத்ர சத நாமாவளி சிறப்பு ஹோமங்கள், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காக்க வேண்டி இன்று காலையில் நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதியில் சிறப்பு ஹோமம், மிருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சுவாமி, அம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: