நியூட்ரினோ ஆய்வு மையம் பணி நடந்த பொட்டிப்புரத்தில் பயங்கர காட்டுத்தீ

தேவாரம்:.தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைவதற்கான முதற்கட்டப்பணிகள் நடந்து வந்தன. இப்பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியான இங்கு தேவாரம், டி.ரெங்கநாதபுரம், புதுக்கோட்டை, திம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ பரவி வருகிறது. ராசிங்காபுரம் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

ஆனாலும், சமூக விரோதிகள் தொடர்ந்து காடுகளை அழிக்கும் வகையில் தீயை பற்ற வைக்கின்றனர்.கடந்த 2 நாட்களாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள புதுக்கோட்டைக்கு மேற்கே காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் அரியவகை மரங்கள், வனவிலங்குகளுக்கு பெரும் ஆபத்து உண்டாகி உள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: