BSNL-ஐ தொடர்ந்து Airtel வாடிக்கையாளர்களும் சலுகை: ரூ.10 டாக் டைம்; ஏப்.17ம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம்

சென்னை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 7,21.330-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 37,780 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே,

கடந்த 24-ம் தேதி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா என்ற கொடூர வைரசை தடுக்க வேண்டுமென்றால் சமூகத்திலிருந்து விலகி இருப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும்.  சமூகத்திலிருந்து அனைவரும் விலகி இருப்பதை உறுதி செய்ய ஓர் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். இந்த முடிவால் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்கலாம். ஆனால், நாட்டு மக்களின்  உயிர்தான் முக்கியம். ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம். அதற்காக கடந்த இன்று (கடந்த 24-ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றார்.

இதனால், இதனால், தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும்  பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் தடையின்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வரும் பொதுத் துறை  நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை ப்ரீபெய்டு செல்லிடப்பேசி சேவையை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதனை போல், தற்போது ஏர்டெல் தொலைத் தொடார்பு நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் வசதி இலவசம் என்றும் ரூ.10 டாக் டைம்  வழங்கப்படும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் வெளியிட்ட அறிக்கையில்:

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் வேலிடிட்டி முடிவடைந்து, ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரா்களின்  வேலிடிட்டி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். மேலும், இந்த காலகட்டத்தில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவா்களுக்கு ரூ.10க்கு டாக் டைம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் துணை  நிறுவனமான எம்டிஎன்எல் (மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்) நிறுவனமும் இந்தச் சலுகையை அறிவித்துள்ளது.

Related Stories: