வெளியூர்காரர்களுக்கு அனுமதியில்லை முகப்பு வாயிலை மூடிய கிராம மக்கள்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராமத்தின் முகப்பு வாயிலை கற்களை கொண்டு கிராம மக்கள் மூடியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் கிராம மக்கள் தானாக முன் வந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் ஊர் முழுவதும் இயற்கை கிருமிநாசினி தயாரித்து தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் நபர்கள் ஊருக்குள் வராமல் இருக்க ஊரின் நுழைவுவாயிலை மூடிவிட்டனர். தங்கள் ஊரை சேர்ந்த மக்கள் வெளியூருக்கு சென்று வந்தால் அவரை ஊரின் நுழைவாயிலில் நிறுத்தி அவர் எடுத்து வரும் பொருட்கள் மீது இயற்கை கிருமிநாசினி தெளித்து விட்டு, அவருக்கு சோப்பு கொடுத்து முகம், கை, கால்களை கழுவிய பின்னர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.

Advertising
Advertising

விழுப்புரம்:  விழுப்புரம்  அருகே உள்ள வி.அகரம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்தை சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இளைஞர்கள்  பங்களிப்புடன் தங்கள் கிராமத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் நுழைய முடியாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல,  நடந்து செல்லவே கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்களாம். குறிப்பாக  வெளியாட்களுக்கு தடைவிதித்த அக்கிராமத்தினர் நோ என்ட்ரி என்ற போர்டையும்  கிராமத்தின் நுழைவு வாயிலில் மாட்டியுள்ளனர். ஊர் கூட்டம் போட்டு, இந்த  முடிவை எடுத்த பொதுமக்கள் கொரோனாவை ஊருக்குள் விடாமல் விரட்டியடிப்போம் என்ற  சபதத்தையும் ஏற்றுள்ளனர். மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவுகளை மதிக்காமல்  ஊர்சுற்றும் பெரியவர்கள் முதல் சிறுசுகள் வரை கடைபிடிக்கின்றனர். இவர்களைப்போன்ற மற்றவர்களும் கொரோனாவை  ஊருக்குள் விடமாட்டோம், விரட்டியடிப்போம் என்ற சபதத்தை ஏற்றுள்ளனர்.

Related Stories: