கொரோனா வைரஸ் பரவலை எப்படி கட்டுப்படுத்தலாம்?: பல்வேறு சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காக, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் நாயுடு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவரை போனில் தொடர்புக் கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 5 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார் என்று ஒரு மூத்த மத்திய அரசு அதிகாரி கூறினார். எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத்தை தனது பணிக்காக அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஊரடங்கு அறிவித்த பின், பிரதமர் மோடி வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில, யோகா குரு பாபா ராம்தேவ், தாவூத் போஹ்ரா அமைப்பு சையத், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுரேஷ் பய்யாஜி உள்ளிட்ட முக்கிய அமைப்பு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

Related Stories:

>