தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு: தற்போதைய ஒரே மருந்து தனிமைப்படுத்துதலே...முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: உலகளவில் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி உள்ளது என தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் பேட்டியளித்தார். பல்லாயிரம் கணக்காணோர் இந்த வைரஸ் நோயால் இறந்து உள்ளார்கள் என கூறினார். இந்தியாவில் கொரோனா தொற்று நோயால் இறந்தவர் எண்ணக்கை 27-ஆக உள்ளது என கூறினார். தற்போது தமிழகத்தில் ஒருவர் மட்டும் இறந்துள்ளார் என தெரிவித்தார். இந்தியாவில் 1139 பேர்களுக்கு சோதனையில் Positive-ஆக கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 50 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார். இந்நிலையில் தற்போது மேலும் கூடுதலாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என கூறினார். ஆகவே மொத்தம் 67 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். மேலும் அவர்கள் அனைவரும் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

தமிழகத்தில் தனி பிரிவின் படுக்கை எண்ணிக்கை அரசு மருத்துவமனை, தனியார் மருத்தவமனையோடு இணைந்து 17,089 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என கூறினார். அதேபோல் இந்த வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை செய்வதற்காக ஆய்வு வசதி 14 மையங்கள் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். விரைவில் மேலும் 3 ஆய்வு மையங்கள் திறக்கப்படும் என தெரிவித்தார். இதுவரை விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 2,09,234 என கூறினார். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்த நபர்களின் எண்ணிக்கை 3470 பேர் என கூறினார். ஆய்வு பிரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1981 பேர் என கூறினார். வீடுகளில் கண்காணிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 43,537 பேர் என கூறினார். தனிமைப்படுத்தபட்டவர் கண்காணிப்பில் இதுவரை இருந்தவர்களின் எண்ணிக்கை 1641 என கூறினார். கொரோனா வைரஸ் நோய் சந்தேகப்பட்டு உள்நோயாளியாக தனி பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1975 பேர் என கூறினார். கொரோனா நோயால் குணமடைந்து இதுவரை 5 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என கூறினார். இதுவரை 8 முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது என கூறினார்.

அனைத்து ஆலோசனை கூட்டத்திலும் தலைமை செயலாளர், துறை அமைச்சர்கள், டிஜிபி, மற்றும் அரசு உயர்அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் என கூறினார். மேலும் அனைத்து மாவட்டத்திலும் நோயின் தடுப்பு பணி எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்து அதற்கு ஏற்றவாறு அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். தலைமை செயலாளர் தலைமையில் இன்று குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் வெளியில் இருந்து 1.5 கோடி முகக்கவசங்கள், N95 ரக முகக்கவசம் 25 லட்சமும், PP பாதுகாப்பு கவசம் 11 லட்சமும் வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். புதிதாக 2500 வென்டிலேட்டர் வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். Test Kit 30,000 வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என கூறினார். இந்நிலையில் நோய் தடுப்பு பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது என கூறினார்.

Related Stories:

>