உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,956 ஆக உயர்வு: அமெரிக்காவில் 2,475 பேர் பலி; இந்தியாவில் 29 பேர் பலி

டெல்லி: உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,956 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 183 நாடுகளில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 330 பேரை பாதித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 004 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 116 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனை போல், இத்தாலியில் 10 ஆயிரத்து 779 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 97, 689 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12,384 பேர் சிகிச்சையில் குணமாகி உள்ளனர். ஸ்பெயினில் 6,803 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 80 ஆயிரத்து 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் 3,300 பேர் பலியாகி உள்ளனர். 81  ஆயிரத்து 439 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் 2,640 பேர் பலியாகி உள்ளனர். இங்கு 38 ஆயிரத்து 309 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் 2,475 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 2,640 பேர் பலியாகி உள்ளனர். 38 ஆயிரத்து 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் 2,606 பேர் பலியாகி உள்ளனர். 40 ஆயிரத்து 174 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 541 பேர் பலியாகி உள்ளனர். 62 ஆயிரத்து 095 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் 152 பேர் பலியாகி உள்ளனர். 9 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெல்ஜியத்தில் 431 பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்து  836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 54 பேர் பலியாகி உள்ளனர். 1,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் 35 பேர் பலியாகி உள்ளனர். 2,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் 17பேர் பலியாகி உள்ளனர். 4 ஆயிரத்து 163 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் 14 பேர் பலியாகி உள்ளனர். 1,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் 3 பேர் பலியாகி உள்ளனர். 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவூதி  அரேபியாவில் 8 பேர் பலியாகியுள்ளனர். 1, 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ரஷ்யாவில் 8 பேர் பலியாகி உள்ளனர். 1, 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கத்தாரில் ஒருவர் பேர் பலியாகி உள்ளனர். 634 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஐக்கிய அரசு அமீரகத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஹ்ரைனில் 4 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒருவர் பலியாகி உள்ளனர். 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. 255 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: