கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்

பிரிட்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,020-ஆக அதிகரித்துள்ளது. 6,68,351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,42,785 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேரும், ஸ்பெயினில் 5,982 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். னாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது 199 நாடுகளில் பரவி விட்டது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை உலுக்கியுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளையும் விட்டுவைக்கவில்லை.

Advertising
Advertising

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பிற நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிகமாக பாதித்த நாடுகளின் விவரம்;

இத்தாலி

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 889 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இத்தாலியில் 92,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் இத்தாலியில் இதுவரை கோவிட்-19 காய்ச்சல் காரணமாக 51 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவில் 1,23,780 பேர் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,229-ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் முதன்முறையாக பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. அக்குழந்தை சிகாகோவில் உயிரிழந்ததாக இல்லினோயிஸின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்தார். இதற்கு முன்னதாக சீனாவில் கொரோனா தொற்றால் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின்

ஸ்பெயினில் 5,982 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78, 797 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 800 க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கண்டது. புதிய வழக்குகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது, ஒரே நாளில் 6,000 க்கும் சற்று அதிகமாகும்.

Related Stories: