அரச குடும்பத்தை விட்டு வைக்காத கொரோனா: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு...பெரும் அச்சத்தில் உலக நாடுகள்

ஸ்பெயின்: சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மரண பயத்தில் உள்ளனர். சீனாவை விட ஐரோப்பிய நாடுகள் பல கடுமையாக பாதிகப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,000-ஐ தாண்டியது. பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

Advertising
Advertising

ஸ்பெயின் நாட்டில் இதுவரை 72 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5,812 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,529 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 674 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். 86 வயதான

ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த முதல் அரச குடும்பத்து உறுப்பினர் இளவரசி மரியா தெரசா என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசி மரியா தெரசாவின் மறைவு அரச குடும்பத்து உறுப்பினர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் இளவரசியை கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளது. உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் சார்லஸ் தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள நிலையில், மொனாக்கோவின் இளவரசர் 62 வயதான ஆல்பர்ட் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: