கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச வாய்ப்பு: 'மன் கி பாத்'நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது முதல் முறையாக பிரதமர் மோடி இன்று மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன்  உரையாற்றும் வகையில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார். இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடம் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் வகையில், வானொலி வாயிலாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது.  தொடர்ந்து, அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

அப்போது, முதல் மாதம் ஒரு முறை என கடந்த பிப்ரவரி வரை தொடர்ந்து 53 மன் கி பாத் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர்  மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியை 2019 ஜூன் 30-ம் தேதி மீண்டும் தொடங்கினார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று மாதத்தின் கடைசி  ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார்.

இன்றைய உரையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடடிக்கைககள் குறித்தும், வைரஸை கட்டுப்படுத்த இரவு பகலாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், செய்தியாளர்கள்  குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 நாள் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது முதல் முறையாக பிரதமர் மோடி உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: