கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை மீறி மசூதி ஒன்றில் தொழுகை நடத்திய முஸ்லீம்கள் மீது போலீஸ் தடியடி

பெங்களூர் :கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை மீறி மசூதி ஒன்றில் தொழுகை நடத்திய முஸ்லீம்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி அடித்த காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அவ்வப்போது மாநில, மத்திய அரசுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த இக்கட்டான சூழலில் கர்நாடகா மாநிலம் பெல்காமில் உள்ள மசூதியில் காவல்துறை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. காவல்துறை பலமுறை எச்சரித்தும் தொழுகைக்காக அவர்கள் கூடியிருந்தனர். காவல்துறையினர் தடியடியால் மசூதியில் தொழுகை முடிந்து சென்ற முஸ்லீம்கள், உடமைகளை கூட எடுக்காமல் அலறிஅடித்துக் கொண்டு ஓடினர். மசூதி வாயிலில் காவல்துறையினர் நின்று கொண்டதால், அவர்களின் தடியடிக்கு ஒருவர் கூட தப்பவில்லை.சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோ கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories: