புதுடெல்லி: நாடு முழுவதும் முக்கியமான 7 நகரங்களில் வீடு விற்பனை சராசரியாக 42 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வீடு விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்களை தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் மும்பை, பெங்களூரு உட்பட முக்கியமான 7 நகரங்களில் வீடு விற்பனை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது. பொருளாதார மந்தநிலை மட்டுமின்றி, கொரோனா வைரஸ் பாதிப்பும் முக்கிய காரணம். கடந்த ஆண்டு ஜனவரி - மார்ச் மாதங்களுடன் ஒப்பிடும்போது விற்பனை 42 சதவீதம் சரிந்துள்ளது. புதிய கட்டுமானங்கள் 41,200ஆக குறைந்து விட்டது.