கொரேனா முன்னெச்சரிக்கைக்கு வரவேற்பு: விவசாயிகள் கடன் தொகை வசூலிப்பதை 6 மாதங்கள் தள்ளி வைங்க...பிரமருக்கு சோனியா காந்தி கடிதம்

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்குக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். உலகம் முழுவதும் 192  நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலகளவில் 21,200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை வைரசால் 15 பேர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 650-ஐ தாண்டியுள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளது.144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரேனா குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டள்ளது பின்வருமாறு...

* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும்.

* கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கான புதிய மருத்துவமனைகளை விரைந்து கட்ட வேண்டும்.

* தீவர கண்காணிப்பு பிரிவுகள், சுவாசக் கருவிகள் அதிகளவில் தயார் செய்க.

* 100 நாள் திட்ட தொழிலாளர்கள், கட்டுமானம் நிவாரணம் வழங்க வேண்டும்.

* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

* விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

* மூடப்படும் ஆலைகளில் இருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும்.

* நாடு முழுவதும் விளைந்து நிற்கும் பயிர்களை அறுவடை செய்ய மத்திய அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அறுவடை செய்யப்படும் நெல் மற்றும் கோதுமையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

* விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன் தொகையை வசூலிப்பதை 6 மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும்.

* வங்கிக் கடன்களுக்கான 6 மாத கால தவணைகளுக்கு வட்டியை ரத்து செய்ய வேண்டும்.

* விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது குறித்து அரசு ஆலோசிக்க வலியுறுத்தல்.

* ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு தலா ரூ.7500 வீதம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

* மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும்.

* ரேஷன் அட்டைதாரர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாக அளிக்க வேண்டும்.

Related Stories: