மதுரை கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : தாய்லாந்து குழுவுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதுதான் தொற்றுக்கு காரணம்

மதுரை : கொரோனாவுக்கு உயிரிழந்த மதுரை நபர் வெளிநாடோ,வெளிமாநிலமோ சென்றதில்லை என்றாலும் தமிழ்நாட்டில் சமூக பரவல் தொடங்கவில்லை என்று அரசு உறுதிப்பட கூறியுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த மதுரை நபர் கட்டிட கான்டராக்டர் ஆவார். மசூதி நிர்வாகியாக இருந்த வந்த அவர், அண்மையில் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த குழுவினருடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தாய்லாந்து குழுவில் 2 பேருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவர்களிடம் இருந்து இவருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்று தெரிகிறது.

வெளிநாடோ, வெளிமாநிலமோ சென்றதில்லை என்றாலும் வெளிநாட்டினருடன் நேரடி தொடர்பில் இருந்ததே மதுரை நபருக்கு கொரோனா பரவியுள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் கொரோனா சமூகப் பரவல் தொடங்கவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மதுரை நபரை சந்தித்தவர்கள், அண்டை வீட்டார், கொரோனா உறுதி செய்யப்படாத நிலையில், சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உயிரை பறிகொடுத்தவர் வசித்த தெரு, சென்று வந்த வழிப்பாட்டுத் தளம், அவர் நடமாடிய இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: