திருச்செந்தூர் கோயில் மூடப்பட்டதால் விநாயகர் கோயில் முன் தாலி கட்டிய சென்னை காதல் ஜோடி: வாட்ஸ்அப்பில் வீடியோ வைரல்

திருச்செந்தூர்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டு உள்ளதால் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் காதல் ஜோடி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் இந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் வருகிற 31ம் தேதி வரை பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோயில் முன்பு சென்னையை சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட காட்சி, வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவில், சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் புடை சூழ, சுடிதார் அணிந்துள்ள இளம்பெண்ணின் கழுத்தில் இளைஞர் ஒருவர் தாலி கட்டுகிறார். அந்த பெண் வெட்கத்துடன் அதை ஏற்று சிரிக்கிறார். அப்போது அங்குள்ளவர்கள் அதனை தங்களது செல்போனில் படம் எடுத்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். மேலும் அந்த வழியாகச் சென்ற பெரியவர் ஒருவரையும் அழைத்து மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கும்படி கூறுகின்றனர். இதனை ஏற்று அந்த பெரியவர் முன் மணமக்கள் தரையில் விழுந்து வணங்குகின்றனர். வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் இந்த திருமணம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: