கொரோனா பரவி வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விலக்கு அளிக்கலாம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை

மதுரை : கொரோனா பரவி வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்குவது குறித்த தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்ய கோரிக்கை

கொரோனா  பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது இந்த உத்தரவு ஏப்ரல் 1ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து தென் தமிழகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் வாகனங்களில் தற்போது வந்து கொண்டிருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள்  நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது இந்த சுங்கக் கட்டண வசூல் மையங்களில் குறைந்தது அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் ஒவ்வொரு வாகனமும் நின்று வருவதால் நோய்க் கிருமிகள் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.

சுங்கக் கட்டணம் ரத்து செய்யய பரிந்துரை

எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று ஒரு நாள் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த வக்கீல் ராஜகோபால் என்பவர் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் , எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று காலை முறையிட்டார். அப்போது நீதிபதிகள், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, இன்று ஒரு நாள் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் அறிவுறுத்தினர்.

Related Stories: