திட்டமிட்டபடி +1, +2 பொதுத்தேர்வுகள்: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் +1, +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி பலபேரை பாதித்து வருகிறது. இதனால் ஏற்கனவே கொரோனா பாதித்த 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்திலும் கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு கூறி இருந்தது. இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடம் தாமதமாக தொடங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனை தொடர்ந்து பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் +1, +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மதியம் 2.45 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: