மாருதி சுசூகி உற்பத்தி நிறுத்தம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.   கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த நிறுவனம் பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ‘‘கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி வெப்ப பரிசோதனை, சுத்தத்தை பேணுதல், வீடியோ கான்பரன்சிங் முறையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், நேரடியாக கூட்டம், ஆலோசனைகள் நடத்துவதை தவிர்த்தல், பணியாளர் பயணத்தை தடுப்பது, உடல் நலம் தொடர்பாக ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என, மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.   

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, கார் உற்பத்தியை நிறுத்துவதாக இந்த நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. மத்திய அரசு நடவடிக்கைகள் மற்றும் உத்தரவுகளின்படி, கொரோனா பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக, ஹரியானாவில் மானேசர் மற்றும் குருக்கிரா ஆகிய இடங்களில் உளள மாருதி வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில், உற்பத்தி உடனடியாக நிறுத்தப்படுகிறது. இதுபோல், மாருதியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவும் செயல்படாது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: