இங்கிலாந்து அரண்மனை ஊழியருக்கு கொரோனா: வேறு அரண்மனைக்கு சென்றார் ராணி

லண்டன்: இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் அரண்மனை ஊழியருக்கு கொரோனா தொற்று பரவியதால் ராணி 2ம் எலிசபெத், வின்ட்சர் அரண்மனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் ஆசிய நாடுகளை விட ஐரோப்பிய நாடுகளே மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தில் ராணி 2ம் எலிசபெத்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அரண்மனை ஊழியர் ஒருவர் கூறுகையில், அரண்மனை ஊழியருக்கு  கொரோனா தாக்கி இருப்பது சமீபத்தில்தான் கண்டறியப்பட்டது. அவருக்கு இந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ராணி 2ம் எலிசபெத் கடந்த வியாழக்கிழமை வின்ட்சர் அரண்மனைக்கு செல்லும் முன்பே இது தெரிய வந்தது. இதனால், ராணி அந்த அரண்மனையிலேயே தங்கியுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்,’’என்றார்.

Related Stories: