10ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு வினாத்தாள் மையங்களுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு: தேர்வுகள் துறை உத்தரவு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, வினத்தாள்  மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வினாத்தாள் பாதுகாப்பு தொடர்பாக  அரசுத் தேர்வுகள் இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒத்தி வைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு தேர்வுக்கான புதிய அட்டவணை குறித்த விவரம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் பின்னர் அறிவிக்கும்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு கேள்வித்தாள் கட்டுக் காப்பாளர்களும், தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட விவரத்தை தெரிவித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்காரணம் கொண்டும் கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்களை திறக்க கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் போட வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர் ஒருவர் எப்போதும் பணியில்இருக்க வேண்டும்.  இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

Related Stories: