கொரோனா வைரஸ் அச்சம்: சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வை ஒத்திவைத்தது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்!

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது. மத்திய அரசு தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெறுவது வழக்கம். சிவில் சர்வீஸ் பணி தேர்வுக்கு மொத்தம் 796 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் சர்வீஸ் தேர்வானது மூன்று கட்டங்களில் நடைபெறும். அவை முதனிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகும். விண்ணப்பதாரர்கள் இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

இதுவரை இந்தியாவில் 206 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யு.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு வரும் 23ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நேர்காணல் தேர்வு நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: