MDMA என்ற புலனாய்வு அமைப்பின் அறிக்கை வந்த பிறகு 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் : அமைச்சர் சண்முகம் விளக்கம்

சென்னை : 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் பதிலளித்துள்ளார் என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.சட்டத்துறை மானிய கோரிக்கை  மீதான விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் 7 பேர் விடுதலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக எம்எல்ஏ தாயகம் கவி கேள்வி எழுப்பினார். இதற்கு  சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதிலளிக்கையில், 7 பேர் விடுதலை விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதில் ஆளுநருக்கு அனுப்பி இருந்தோம். அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும், இறுதி முடிவும் ஆளுநர் எடுக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு தீர்மானம் குறித்து ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு ஆளுநர் செயலகத்திலிருந்து கிடைத்துள்ள பதிலில் MDMA என்ற புலனாய்வு அமைப்பின் அறிக்கை வந்த பிறகு, ஆளுநர் தனது இறுதி முடிவை தெரிவிப்பார் என்று ஆளுநர் செயலகம் விளக்கத்தை கொடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: