கொரோனா வைரஸ் எதிரொலியாக 31ம் தேதி வரை சொர்க்கபூமியான அலையாத்திகாடுக்கு சுற்றுலா செல்ல தடை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்டதாகும். இந்த அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகாக பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பார்கள்.

அந்த அளவிற்கு ஒற்றுமொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொர்க்க பூமியாக இங்கு காண முடியும். இந்த நிலையில் தற்பொழுது மிக கொடிய நோயாக கருதப்படும் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த கொடிய நோயிலிருந்து பாதுக்காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. அதே போல் வரும் 31ம்தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் தமிழக அரசு அளித்துள்ளது. இதனால் இந்த கொடிய கொரானா வைரஸ் தேசிய பேரிடராக பார்க்க படுகிறது. இதனால் தமிழகம் மற்றுமின்றி உலகளவில் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவின் அறிய பகுதியாகவும், தமிழ்நாட்டின் மிகப் பெரிய சுற்றுலா தளமாக கருதப்படும் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வரும் 31ம்தேதி வரை சுற்றுலா செல்ல வனத்துறை தடை செய்துள்ளது.

இதுகுறித்து முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் தாகீர் அலி கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் இந்த நோயிலிருந்து பாதுக்காக்கும் வகையில் இன்று முதல் அலையாத்திக் காட்டுக்கு சுற்றுலா செல்லவும், சுற்றுலா பயணிகள் படகுகள் செல்லவும் வரும் மார்ச் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: