ஈரான்: ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம், ஈரானின் தெற்கு பகுதியான பந்தர் காமர் பகுதியிலிருந்து 39 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ஈரானில் மிதமான தென் பகுதி மாகாணமான ஹர்மோசானில் ஞாயிறு இரவு 10.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.