LKG-UKG வகுப்புகளுக்கு அறிவித்தப்படி விடுமுறைதான்; கொரோனா குறித்து விரைவில் அறிக்கை வெளியீடு...முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

மதுரை: சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால்  பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உபி,  பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு  நடவடிக்களை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், நர்சரி, தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அறிவித்தது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர்  சிஜிதாமஸ்வைத்யன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து வகை  பள்ளிகளிலும் செயல்படும் எல்கேஜி, யுகேஜி, பிரிகேஜி  வகுப்புகளில் படிக்கும் அனைத்து வகை குழந்தைகளும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி,  

மாவட்டங்களில் எல்கேஜி, யுகேஜி, உள்பட 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வைரஸ் தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்க முதன்மைக் கல்வி  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள 5ம் வகுப்பு வரை விடுமுறை  அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவும் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, LKG-UKG வகுப்புகளுக்கு விடுமுறைதான்; நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் கட்சியே ஆரம்பிக்கவில்லை; பின்னர் எப்படி கருத்து கூறமுடியும்.  அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் தேவையில்லாத கருத்தை ரஜினி தெரிக்க கூடாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் கூறினார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்  என்றும் கூறினார். குடியுரிமை சட்டம் குறித்து சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை. குடியுரிமை சட்டம் குறித்து தெரிவிக்க வேண்டிய கருத்துகளை சட்டமன்றத்தில் தெளிவாக தெரிவித்துள்ளேன் என்றும் கூறினார்.

Related Stories: