கீழடி அருகே முதுமக்கள் தாழியின் மூடிகள் கண்டுபிடிப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி மற்றும் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் கொந்தகையில் நடந்து வரும் ஆய்வின்போது முதுமக்கள் தாழியின் மூடி கண்டறியப்பட்டுள்ளது. தாழி மூடியில், பிடிமானப்பகுதி கருப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்திலும் என இரு வண்ணங்களில் உள்ளது. கூம்பு வடிவிலும் உள்ளது. தாழிகள் குறைந்த ஆழத்திலேயே கிடைத்துள்ளதால் இதற்கு கீழே மேலும் தொல்பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், இந்த இடம் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

Related Stories: