வேலூர் மாநகராட்சி எல்லைப்பகுதிகள் அளவீடு

வேலூர்: வேலூர் மாநகராட்சி எல்லை பகுதிகளை நிர்ணயிக்கும் வகையில் நவீன முறையில் அளவீடு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. வேலூர் நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2011ல் காந்தி நகர், கழிஞ்சூர், பழைய காட்பாடி, தொரப்பாடி, சேண்பாக்கம், அல்லாபுரம் என 6 பேரூராட்சிகளுடன், கொணவட்டம், காங்கேயநல்லூர், விருதம்பட்டு, அலமேலுமங்காபுரம், அரியூர், சித்தேரி, விருபாட்சிபுரம், இடையன்சாத்து, பலவன்சாத்து ஆகிய ஊராட்சிகளுடன் முறையாக மாநகராட்சி எல்லைகளுடன் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் முறையான வரிவிதிப்பை மேற்கொள்வதுடன், அடிப்படை பணிகளை செய்து முடிக்கும் வகையில் முறையாக அளவீடு செய்யும் பணி இதுவரை நடத்தப்படவில்லை.

இப்பணி தற்போது தொடங்கி தீவிரமடைந்துள்ளது. வேலூர் அடுத்த அரியூரில் ஊசூர் சாலை உட்பட பல்வேறு சாலைகளில் நவீன கருவிகளுடன் அளவீடு செய்யும் பணி நடந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மாநகராட்சி பகுதிகளில் முறையாக அளவீடு செய்து முடித்த பின்னர் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்படும்’ என்றனர்.

Related Stories: