திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்

சத்தியமங்கலம், : திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப் பாதை வழியாக தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணிநேரமும் பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டது. இதனால், எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாததால் மலைப் பாதையில் சென்ற வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டு படி மெதுவாக ஊர்ந்து சென்றன. நேற்று காலை முதல் இப்பகுதியில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் காலை 11 பனிமூட்டம் விலகியது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால் தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் விலகிய பின் போக்குவரத்து சீரானது. 

Related Stories: