பழைய பெண் நண்பருடன் 60 வயதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருக்கு திருமணம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முகுல் வாஸ்னிக் (60), தனது பழைய நண்பர் ரவீனா குரானாவை  (60) திருமணம் செய்து கொண்டார்.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநிலங்களவை எம்பி அகமது படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த  திருமணம், டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. இதுகுறித்து, ராஜஸ்தான் முதல்வர் கெலாட் வெளியிட்ட  டிவிட்டர் பதிவில், ‘புதிய பயணத்தை தொடங்கியுள்ள முகுல் வாஸ்னிக் மற்றும் ரவீனா குரானா ஜோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வரவிருக்கும்  ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களாக இருக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி வெளியிட்ட பதிவில், ‘புதிதாக திருமணமான முகுல் வாஸ்னிக் மற்றும் ரவீனா குரானா  ஆகியோரை வாழ்த்துவது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று கூறியுள்ளார். முன்னதாக, முகுல் வாஸ்னிக் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தவர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவரது பெயரும்  பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: