திருமங்கலம் அருகே குலதெய்வ கோயிலில் விஜயகாந்த் தரிசனம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் குலதெய்வமான வீரசின்னம்மாள் கோயில் உள்ளது. விஜயகாந்த் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன், இக்கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்வார். நேற்று முன்தினம் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த தேமுதிக மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்த், மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று குலதெய்வ கோயிலுக்கு சென்றார். அங்கு பவுர்ணமி சிறப்பு பூஜையில் பங்கேற்று குலதெய்வத்தை வணங்கினர்.. பின்னர் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories: