தொண்டி கடற்கரையில்கரை ஒதுங்கியது இலங்கை படகு

தொண்டி: கச்சத்தீவு திருவிழா கடந்த 6 மற்றும் 7ம் தேதிகளில் நடந்தது. இந்த விழாவில் தமிழகம், இலங்கையை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கு இலங்கையில் இருந்து வந்த பக்தர்களின் 10க்கும்  மேற்பட்ட படகுகள் காற்றின் வேகத்தில் நங்கூரத்தின் கயிறு அறுந்ததால் இந்திய எல்லைக்குள் வந்து விட்டன. சில படகுகளை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர், இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தனர். இதில் ஒரு படகு தொண்டி  புதுக்குடி கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை கரை ஒதுங்கியது. தகவல் பேரில் வந்த மரைன் போலீசார் படகை மீட்டு, அது குறித்த விவரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: