நாடு முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளது: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மக்களவையில் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதன்படி கடந்தாண்டு டிசம்பர் இறுதிவரை நாட்டில் 2,40,000 போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போக்சோ வழக்குகளுக்காக ஒரு சிறப்பு நீதிமன்றம் கூட அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் பாலியல் மற்றும் போக்சோ வழக்குகளை விசாரிக்க 14 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘போக்சோ’ சட்ட வழக்குகளை ஓர் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: