அரசியல் பிரவேசம் குறித்து மக்கள் மன்ற செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை : கூட்டத்தில் நடந்ததை வெளியில் சொன்னால் கடும் நடவடிக்கை என கண்டிப்பு

சென்னை : சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை காரணமாக தமிழ் புத்தாண்டில் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ரஜினிகாந்த் காலை 10.30 மணி அளவில் வந்தார்.சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையின் போது, புதிய கட்சி அறிவிப்பு, மாநாடு நடத்துவது மற்றும் மக்களின் ஆதரவு குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பதை வெளியில் சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் யாரும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாதவாறு மாவட்ட செயலாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியிருந்தார்.இந்த சூழலில் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. 

Related Stories: