மதுரையில் நீதிமன்ற வளாகம் அருகே ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது எப்படி?... உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: மதுரை உயர்நீதிமன்றம் அருகே ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது எப்படி என்று தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் சிலை அமைக்க கோரி மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் முறை சங்கத் தலைவர் கே.சி.செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முத்துராமலிங்கத் தேவர் சிலையையும் அகற்ற உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்,எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மதுரை நீதிமன்றம் அருகே ஜெயலலிதா சிலை எந்த அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: