வளர்ச்சியில் தமிழகம் பின் தங்கி உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டசபையில் பேசும்போது, குடியுரிமை திருத்த சட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். இந்நிலையில், பத்திரிகையாளர்கள் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக, அந்த சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பரிசீலிக்கப்படும் என அவர் தனது கருத்தை கூறியிருக்கலாம். இதன்பிறகு என்ன நடக்கிறது என பார்ப்போம்.

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி துவங்கட்டும். அவரது கட்சிக் கொள்கை கோட்பாடுகளை முதலில் அறிவிக்கட்டும். அதன்பின் அவருடன் யாரெல்லாம் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்யலாம். நடிகர் கமல்ஹாசன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இது திரைப்படம் தயாரிப்பது போல் அல்ல. இது தமிழகத்தின் முக்கிய பிரச்னை.கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகம் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியுள்ளது. அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானது. இதை கமல்ஹாசன் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை அதிமுகவிடம் ராஜ்யசபா தேர்தலில் பாஜ சீட் கேட்டு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முயற்சி எடுப்பதற்கான தேவை இருக்கிறதா என்பது பற்றியும் எனக்குத் தெரியவில்லை.

Related Stories: