நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போலீசாருக்கு 48,000 கோடி ஓராண்டில் லஞ்சம் : லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் தரும் அவலம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 பெரிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சாலை போக்குவரத்தில் பெரும் அளவில் லஞ்சம் கைமாறுவது தெரியவந்துள்ளது. 67 சதவீதம் லாரி டிரைவர்கள் தாங்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை  போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து செல்வதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஓராண்டில் மட்டும்  சுமார் ₹48,000 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.‘சேவ் லைப் பவுண்டேசன்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு நாடு முழுவதும் போக்குவரத்து அதிகம் உள்ள 10 நகரங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு அறிக்கையை டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை  இணை அமைச்சர் வி.கே. சிங் வெளியிட்டார். அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:

* நாடு முழுவதும் சரக்குகளை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு ெகாண்டு செல்லும் லாரி உரிமையாளர்கள் பெரும் அளவில் லஞ்சம் கொடுத்துதான் தொழில் நடத்த வேண்டிய அவலம் உள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது.

* லாரி உரிமையாளர்கள் ஒரு வகையில் லஞ்சத்தை தருகின்றனர் என்றால், லாரிகளை மாநிலத்துக்கு மாநிலம் இயக்கும் போது டிரைவர்களும் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை துறை ஊழியர்களுக்கு லஞ்சம் தர வேண்டியிருக்கிறது.

* இப்படி ஓர் ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் எவ்வளவு என்றால் ₹48,000 கோடி என்றால் எந்த அளவுக்கு லஞ்சம் புரையோடிப் போய் உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

* சாலை போக்குவரத்தில் சுமார் 82 சதவீதம் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள்,  வழக்கமாக தாங்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போலீசார் மற்றும் சோதனை சாவடி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து செல்வதை ஒப்புக்  கொண்டுள்ளனர்.

* ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளுக்கும் தாங்கள் லஞ்சம் கொடுத்து இருப்பதை ஏராளமானவர்கல் ஒப்புக் கொண்டுள்ளனர்.

* ஒரு முறை சரக்குகளை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு திரும்பி வருவது வரையில் சுமார் ₹1,257 வரையில் லஞ்சம் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

* தங்களது டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்கவும் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதை டிரைவர்கள் கூறினர்.

* வாகனம் பதிவு மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதும் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய முடியாது என்பது இந்த ஆய்வு அறிக்கையில் இருந்து  தெரிந்து கொள்ளலாம்.

* போக்குவரத்து அதிகம் உள்ள 10 நகரங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்தப்பட்டது.

* ஆர்டிஓ அதிகாரிகள், போலீசாருக்கு வழக்கமாக லஞ்சம் தர வேண்டும் என்று 82 சதவீதம் பேர் கூறினர்

* எதிலும் லஞ்சம் தராவிட்டால் தொழில் செய்ய முடியாது என்றும் கூறினர்.

Related Stories: