குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம்

கம்பம்: கம்பம் வ.உ.சி திடலில், ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில சிறுபான்மை குழு துணைச்செயலாளர் அக்பர் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட திமுக மாநில பேச்சாளரும், மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளருமான தமிழன் பிரசன்னா பேசுகையில், ‘தமிழ்நாட்டை மோடியின் காலடியில் தமிழக ஆட்சியர்கள் அடகு வைத்துவிட்டனர்.

இந்திய தேசிய கொடியை வடிவமைத்து, சுதந்திரத்திற்காக பெரிதும் பாடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டும் அனுமதிக்க முடியாது எனக்கூறுவது அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த குடியுரிமையை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் வாங்க வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில், ‘திமுக நகர செயலாளர் துரை.நெப்போலியன், வாவேர் பள்ளி ஜமாத் தலைவர் பாபா பதுருதீன், இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அபுதாகிர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழர் வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் தர்வேஸ் முஹைதீன் நன்றி தெரிவித்தார்.

Related Stories: