குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பட்டிமன்றம் நடத்தி நூதன போராட்டம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து, குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி கடந்த 15ந்தேதி மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். இதில் 13வது நாளான நேற்று நடந்த போராட்டத்திற்கு குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன்அலி தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தப்பா சித்திக், அன்சாரி, வக்கீல் தீன்முகமது, அபுபக்கர் சித்திக், சம்சுதீன் மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர்கள் சிறுவர்கள், பெண்கள் தனித்தனியாக பங்கேற்ற எதிர்ப்பு கோசங்கள், பெண்கள் பங்கேற்ற சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்றிரவு பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பட்டிமன்றம் நடத்தி நூதனப்போராட்டம் நடத்தினர். இதற்கு நடுவராக பேராசிரியர் இபுராஹீம் அன்சாரி கலந்துக்கொண்டு பேசினார்.

Related Stories: