டெல்லி வன்முறையை எதிர்த்த ரஜினியின் கருத்தை ஆதரிக்கிறேன் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

விருதுநகர்: கலவரத்தை கடுமையான சட்டம் போட்டு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென ரஜினி கூறியிருப்பது நியாயமான கருத்து என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகரில் மருத்துவக்கல்லூரிக்கு மார்ச் 1ல் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: மதத்தை வைத்து அரசியல் செய்யும் காரணத்தால் டெல்லியில் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை கடுமையான சட்டம் போட்டு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென ரஜினி கூறியிருப்பது நியாயமான கருத்து. ரஜினி மதத்தை வைத்து அரசியல் செய்வோரை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென கூறியிருக்கிறார்.

Advertising
Advertising

அதிமுக, பாஜக மற்றும் எங்களுடன் கூட்டணி வைத்திருக்கும் யாரும் மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. அனைத்து மதத்தினரும் கைகோர்த்து செல்ல வேண்டுமென நினைக்கிறோம். கலவரத்தை தூண்டி விடுவோரை பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். டெல்லியில் கலவரம் நடக்கும்போது, அதை தூண்டிய தலைவர்கள் யாரும் அங்கு இல்லை. டிரம்ப் வரும்போது பாஜகவினர் கலவரத்தை தூண்டுவார்களா? எங்கு கலவரம் நடந்தாலும், ஆர்எஸ்எஸ், சங்பரிவார் தான் காரணம் என கூறுவது தவறு. பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் 500 இந்துக்களை சுட்டு கொல்கின்றனர். வீடியோ காட்டவா? அதுபோன்ற சம்பவம் இந்தியாவில் நடந்திருக்கிறதா. இந்திய பொருளாதாரம் குறையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: